நண்பர் ஒருவர் சென்ற மாதம் GST Return File செய்யவில்லை,பிறகு இந்த மாதத்திற்கு GST Return பண்ணலாமேயென்று File செய்கையில் இந்த மாதத்திற்கு File செய்ய அனுமதிக்கவில்லை.
“அது எதனால்” என்று தெரியாமல் இருந்தார். பின்பு எங்களிடம் வந்து GST-இல் “இந்த மாதம் File செய்யமுடியவில்லை எதனால்” என்று கேட்டார். நாங்கள் அவரது Account-யை Check செய்யும்பொழுது அவர் சென்ற மாதத்திற்க்கு Return File பண்ணவில்லை, அதை பற்றி அவரிடம் கேக்கும்பொழுது “சென்ற மாதம் வியாபாரம் நடக்கவில்லை அதனால் Return File செய்யவில்லை” என்று கூறினார்.
“வியாபாரம் நடக்கவில்லையென்றாலும் Nil Return File செய்திருக்கவேண்டும்” என்று கூறினோம். அந்த நண்பர் “ஓ அப்படியா இது பற்றி அவ்வளவா தெரியாது” என்று கூறினார், பிறகு “இதற்கு இப்பொழுது என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.
“சென்ற மாதம் File செய்யாததிற்கு அபராதம் 500 கண்டிப்பாக கட்டவேண்டும்” என்று கூறினோம். அவரும் அதை கட்டிவிட்டார், “இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க மாதாமாதம் தவறாது return செய்துவிடுங்கள்” என்று கூறினோம். அந்த நண்பர் இனிமேல் தவறாது file செய்துவிடுகிறேன் என்றும் இனிமேல் எனது GST return-யை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
இதுபோல் உங்களுக்கும் நடக்காமல் இருக்க GST Monthly Return-யை தவறாது File பண்ணுங்கள். GSTR1 file செய்யவில்லை என்றால் மாதம் அபராதம் 500-ம், GSTR 3B File செய்யவில்லை என்றால் நாளொன்றுக்கு அபராதம் 20-ம் விதிக்கப்படும்.