வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக வருமான வரி வசூலானதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2022-23 நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கைவிட அதிகமாக, அதாவது ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி வசூலாகியுள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 77 லட்சமாக அதிகரித்துள்ளது. […]