வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக வருமான வரி வசூலானதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2022-23 நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கைவிட அதிகமாக, அதாவது ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி வசூலாகியுள்ளது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 77 லட்சமாக அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க ஆதார் – பான் எண்ணை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வரி செலுத்துபவர் எண்ணிக்கை அதிகம் அடையும் மேலும் அரசின் வருவாய் இதன்மூலம் உயரும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.