பொதுவா ஒரு வருமானத்துக்கு கவர்மெண்ட் Tax கிடையாது (Tax-free) அப்படின்னு சொல்லிட்டா, நாம அதை பத்தி பெருசா கவலைப்பட மாட்டோம். அதை ITR-ல காட்டணும்னு கூட நிறைய பேர் நினைக்க மாட்டாங்க. ஆனா, வருமான வரி சட்டத்துல ஒரு முக்கியமான ரூல் இருக்கு. உங்களுக்கு வர்ற அந்த Tax-free income, நீங்க கட்ட வேண்டிய மொத்த Tax amount-ஐ அதிகமாக்க வாய்ப்பு இருக்கு. அது எப்படி நடக்கும்னு ரொம்ப ஈஸியா புரியுற மாதிரி சொல்றேன் படியுங்கள்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், விவசாய வருமானம் (Agricultural Income):
நம்ம இந்திய சட்டப்படி விவசாய வருமானத்துக்கு முழுமையா வரி விலக்கு இருக்கு (100% Tax-free). ஆனா, உங்களுக்கு விவசாய வருமானமும் வந்து, கூடவே நீங்க ஒரு கம்பெனில வேலை பார்த்து சம்பளம் வாங்குறீங்க, அல்லது சொந்தமா பிசினஸ் பண்ணி சம்பாதிக்கிறீங்கனு வெச்சுப்போம்.
இங்க தான் Income Tax Department ‘Partial Integration’ அப்படிங்குற ஒரு முறையை பயன்படுத்துறாங்க.
இது எப்படி வேலை செய்யும்?
நீங்க எந்த Tax Slab-ல வரீங்கனு கண்டுபிடிக்க, உங்க சம்பளத்து கூட இந்த விவசாய வருமானத்தையும் சேர்த்து கவர்மெண்ட் முதல்ல கணக்கு போடுவாங்க.
உதாரணத்துக்கு, உங்க சம்பளத்துக்கு மட்டும் கணக்கு போட்டா நீங்க 10% tax slab-ல இருப்பீங்க. ஆனா, உங்க விவசாய வருமானத்தையும் அதுகூட சேர்த்தா, உங்க மொத்த வருமான கணக்கு கூடி, நீங்க 20% அல்லது 30% tax slab-க்கு மாறிடுவீங்க.
இதனால என்ன ஆகும்?
கடைசியா Tax கணக்கு பண்ணும் போது விவசாய வருமானத்துக்கு அவங்க tax விலக்கு கொடுத்துடுவாங்க. அதுல எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா, அந்த விவசாய வருமானம் உங்களை higher slab-க்கு (அதாவது 20% அல்லது 30% bracket-க்கு) தள்ளிவிட்டதால, நீங்க உங்க சம்பளத்துக்கு கட்ட வேண்டிய tax amount நார்மலா கட்டுறதை விட அதிகமாகிடும்.
நீங்க செய்ய வேண்டியது என்ன?
ஏப்ரல் 1-க்கு அப்புறம் நீங்க கணக்கு பார்க்கும் போது, Tax-free income தானனு அசால்ட்டா இருந்துடாதீங்க. ITR file பண்ணும் போது, எனக்கு விவசாய வருமானம் இருக்கு, ஆனா அது tax-freeனு சொல்லி அதை ITR-ல காட்டாம மறைக்க கூடாது. நாளைக்கு அது உங்க பேங்க் அக்கவுண்ட் மூலமா AIS-ல தெரிஞ்சா உங்களுக்கு Income Tax Notice வரும்.
அதனால உங்க சம்பளம், பிசினஸ் வருமானம், மற்றும் Tax-free வருமானம் எல்லாத்தையும் சரியா கணக்கு காட்டி ITR file பண்றது தான் பாதுகாப்பானது.
இந்த Partial Integration முறை பத்தி உங்களுக்கு ஏதாவது doubt இருந்தா comment-ல கேளுங்க. எந்த சிக்கலும் இல்லாம சரியான முறையில Tax file பண்ண, நேரடியாக நம்ம கன்சல்டன்சியை contact பண்ணுங்க.
விவசாயம் மற்றும் வேறு வேலைகள் செய்யும் உங்க நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.
