ரியல் எஸ்டேட் பண்றவங்களுக்கும், விவசாய நிலம் விக்கிறவங்களுக்கும் ஒரு முக்கியமான அப்டேட்.!
சமீபத்துல குஜராத்ல ஒருத்தர் தன்னோட விவசாய நிலத்தை வித்து 8.75 கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்காரு. ஆனா அவர் வருமான வரி (Income Tax) கட்டல, ITR-ம் file பண்ணல.
இத கவனிச்ச IT Department அவருக்கு நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. கடைசியில கேஸ் கோர்ட்டுக்கு (ITAT) போய், அந்த நபர் தான் ஜெயிச்சிருக்காரு! அரசாங்கத்துக்கு அவர் ஒரு ரூபா கூட வரி கட்ட தேவையில்லனு தீர்ப்பு வந்துருக்கு.
இது எப்படி நடந்துச்சு? வாங்க முழு கதையையும் பார்ப்போம்!
நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் பரூச் பகுதியை சேர்ந்த ஒருத்தர், 2015-16-ல தன்னோட இரண்டு விவசாய நிலங்களை வித்திருக்காரு. அதுல வந்த லாபம் தான் இந்த 8.75 கோடி (Long Term Capital Gains).
IT அதிகாரி ஏன் வரியை கேட்டாரு?
அந்த நிலத்தை வாங்குன நபர், அத விவசாயத்துக்கு யூஸ் பண்ணாம Industrial purpose-க்காக யூஸ் பண்ண போறாரு. அதனால, இது விவசாய நிலம் கிடையாது, இது ஒரு Commercial Capital Asset. நீங்க 8.75 கோடிக்கும் வரி கட்டணும்னு IT அதிகாரி நோட்டீஸ் அனுப்பிட்டாரு.
கோர்ட் (ITAT) சொன்ன அதிரடி தீர்ப்பு என்ன?
இந்த கேஸ் Income Tax Appellate Tribunal (ITAT) அகமதாபாத் கோர்ட்டுக்கு போனப்போ, அவங்க வரித்துறை அதிகாரி சொன்னத தள்ளுபடி பண்ணிட்டு, நிலம் வித்தவருக்கு சாதகமா ரெண்டு முக்கியமான பாயிண்ட்ஸ் சொன்னாங்க:
விக்கும்போது என்ன Status? நிலத்தை விக்கும்போது அது Revenue Record-படி சுத்தமான ‘விவசாய நிலமா’ தான் இருந்துச்சு. நிலத்தை வாங்குனவங்க 5-6 வருஷம் கழிச்சு தான் அத Commercial நிலமா மாத்தியிருக்காங்க. வாங்குனவங்க எதிர்காலத்துல அத வச்சு என்ன பண்றாங்கங்கறது வித்தவரோட பொறுப்பு கிடையாது. விக்கும்போது அது விவசாய நிலமா இருந்தா, அதுக்கு வரி கிடையாது!
Municipality Limit: அந்த நிலம் Municipality எல்லையில இருந்து 2-3 கிலோமீட்டர் தள்ளி இருந்துச்சு. அங்க மக்கள் தொகையும் 25,000 க்கும் கீழ தான் இருந்துச்சு. அதனால சட்டப்படி (Section 2(14)) அது கிராமப்புற விவசாய நிலம் கணக்குல தான் வரும். அது ‘Capital Asset’ கிடையாது.
இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய பாடம் என்ன?
நீங்க ஒரு கிராமப்புற விவசாய நிலத்தை (Rural Agricultural Land) விக்கிறீங்கன்னா, அதுக்கு Capital Gains Tax கட்ட தேவையே இல்ல!
ஆனா, நீங்களே அந்த நிலத்தை விக்கிறதுக்கு முன்னாடி Non-Agricultural (NA) நிலமா மாத்திட்டு, அதுக்கப்புறம் வித்தா… கண்டிப்பா வரி கட்டி தான் ஆகணும்.
நிலம் விக்கிற அன்னைக்கு அந்த நிலத்தோட Revenue Record Status என்னவா இருக்குனு செக் பண்றது ரொம்ப ரொம்ப முக்கியம்!
உங்களுக்கோ, இல்ல உங்க நண்பர்களுக்கோ நிலம் விக்கும்போது இது மாதிரி Tax சந்தேகங்கள் வந்திருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க
