Senior Citizens-க்கான safest investment scheme Senior Citizens Savings Scheme பற்றி பார்க்கலாம். இது இந்திய அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பான INVEST scheme. 55 முதல் 60 வயது வரை VRS எடுத்தவர்கள் சில விதிமுறைகளுடன் இதில் INVEST பண்ணலாம். குறைந்தபட்சம் rs 1,000 முதல் அதிகபட்சம் rs 30 லட்சம் வரை ஒரு நபருக்கு INVEST பண்ணலாம். தற்போதைய வட்டி விகிதம் 8.2%. வருடத்திற்கு 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டி நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் வரும். இதற்கான Tenure period 5 ஆண்டுகள், மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இதில் invest பண்ணுவதன் மூலம் வருமான வரியில் section 80C கீழ் Tax exemption வாங்கிக்கொள்ளலாம். ஆனால், அதிலிருந்து வரும் Interest rs 50,000-க்கு மேல் வந்தால் TDS பிடிக்கப்படும். இந்த investment-யை Post office-லோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கலாம். இந்த scheme யாருக்கு ஏற்றதுனா, ஓய்வு பெற்ற பிறகு நிலையான வருமானம் வேண்டும்நு நினைக்கிறவங்க, Risk எடுக்க விரும்பாதவர்கள் ,FD-வை விட அதிக வட்டி தேவைப்படுபவர்களுக்கு SCSS ஒரு சிறந்த திட்டம்.
