சிக்கிம் இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம். 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் இணைந்தபின், அங்குள்ள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், இந்திய அரசு சிறப்பு சட்ட சலுகைகள் அளித்தது. அவற்றில் மிக முக்கியமானது வருமான வரி சட்டம் பிரிவு 10(26AAA) ஆகும்.
இந்தச் சட்டத்தின் கீழ், சிக்கிம் மாநிலத்தில் பிறந்து, அங்கேயே நிரந்தரமாக வாழும் வம்சாவளி நபர்கள், தங்களது தனிப்பட்ட வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இந்த விலக்கு, சிக்கிம் மக்களின் பாரம்பரிய உரிமைகளையும், வாழ்க்கைமுறையையும் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
யாருக்கு இந்த வரிவிலக்கு கிடைக்காது?
இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தாது. கீழ்கண்ட நபர்களுக்கு இந்த சட்டவிலக்கு கிடையாது:
1. சிக்கிம் மாநிலத்தில் பிறக்காதவர்கள்
2. புதிய குடியுரிமை பெற்றவர்கள்
3. சிக்கிமில் வாழ்ந்தாலும், வருமானம் வேறு மாநிலத்திலிருந்து பெறுபவர்கள்
இவர்கள் அனைவரும் இந்தியாவின் பொது வரி விதிகளுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
குறிப்பு: இந்தச் சலுகை வருமான வரிக்கு மட்டுமே பொருந்தும்; GST (Goods and Services Tax) வரிகளில் எந்தவிதமான விலக்கும் இல்லை.