தீபாவளி சீசன் பரிசு வருவதால், என்ன வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். எந்த வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது மற்றும் எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, உறவினர்களிடமிருந்து பெறப்படும் தீபாவளி பரிசுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் (ITA) கீழ் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து பெறப்படும் 50,000 ரூபாய்க்கு மேல் பெறப்பட்ட பரிசுகள் “பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்”(“Income from other sources”)- இன் கீழ் வரி விதிக்கப்படும்.
DVS ஆலோசகர்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திவாகர் விஜயசாரதி கூறுகையில், வரிவிதிப்புக் கண்ணோட்டத்தில் ஒரு தனிநபரின் “உறவினர்” என்ற சொல் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
(A) தனிநபரின் மனைவி;
(B) தனிநபரின் சகோதரர் அல்லது சகோதரி;
(C) தனிநபரின் மனைவியின் சகோதரர் அல்லது சகோதரி;
(D) தனிநபரின் பெற்றோரில் ஒருவரின் சகோதரர் அல்லது சகோதரி;
(E) தனிநபரின் வழித்தோன்றியவர்கள்;
(F) தனிநபரின் வாழ்க்கைத் துணையின் வழித்தோன்றியவர்கள்;
மேலும், சில சிறப்பு சந்தர்ப்பங்களில் பெறப்படும் பரிசுகளுக்கு வரி விலக்கு உண்டு. அத்தகைய சிறப்பு சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:
- திருமணம் (Wedding)
- உயிலின்படி (According to the will)
- பரம்பரை மூலம் அல்லது பணம் செலுத்துபவரின் மரணம் (By inheritance or on the death of the payee)
- உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்து பரிசு பெறப்பட்டது (A gift was received from the local administration)
பிரிவு 10 (23) இன் கீழ் எந்தவொரு கல்வி நிறுவனத்திலிருந்தும் பெறப்பட்ட பரிசு (Gift received from any educational institution under section 10 (23))
தொண்டு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பரிசு (A gift received from a charity)
தீபாவளியின் போது கிடைக்கும் பரிசுகள் கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் இது சேர்க்கப்படவில்லை என்கிறார் விஜயசாரதி.
“எனவே, மேலே குறிப்பிடப்பட்டவை அல்லாத பிற சந்தர்ப்பங்களில் உறவினர் அல்லாதவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகள், மதிப்பு ரூ. 50,000 மேலிருந்தால், வரிவிதிப்புக்கு உட்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
பின்வரும் சொத்துக்களின் ரசீது பரிசு வரிவிதிப்பு வரம்பிற்கு உட்பட்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்:
➡ பங்குகள் மற்றும் பத்திரங்கள் (Stocks and Bonds)
➡ அணிகலன்கள் (Jewlery)
➡ தொல்லியல் சேகரிப்புகள் (Archaeological collections)
➡ வரைபடங்கள் (Drawings)
➡ ஓவியங்கள் (Paintings)
➡ சிற்பங்கள்(Sculptures)
➡ எந்த கலை வேலையும் (Any work of art)
➡ பொன் (Gold)
“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மேலே பட்டியலிடப்பட்டவை அல்லாத பிற சொத்துக்களின் பரிசுகள், அவை ரூ. 50,000 கீழேயிருந்தால், வரி விதிக்கப்படாது. எவ்வாறாயினும், மேல் பண மதிப்பீட்டின் ரசீது 50,000 மேல் அல்லது அசையா சொத்து மதிப்பு ரூ. 50,000 மேலேயிருந்தால் வரி வரம்புக்குள் இருக்கும்” என்கிறார் விஜயசாரதி.