Assessment Year 2021-22 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவம் ITR-1 மற்றும் ITR-4 மட்டும் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பிற படிவங்கள் விரைவில் வெளியிடுவோம் என்று வருமான வரித்துறை அறிவித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த படிவங்களை தரவிறக்கம் செய்து தகவல்களை நிரப்பி வைத்துக் கொள்ளலாம் ஆனால் இணையத்தில் தாக்கல் செய்ய முடியாது. அதை இன்னும் திறந்து விடப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் அதை செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் இந்த வருடம் கொடுக்கப்பட்ட படிவங்கள் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த முறையிலிருந்து முற்றிலும் வேறு விதமாக வந்திருக்கிறது. இதற்கு முன்பு ஜாவா அப்ளிகேசன் கொடுத்து அதில் பதிந்து பின்னர் அந்த XML File ஐ எடுத்து வந்து வருமான வரி இணையதளத்தில் ஏற்ற வேண்டும் என்று இருந்தது. அதில் பல சிக்கல்கள் இருந்து வந்தது. இம்முறை EXE File ஆக கொடுத்து அதில் பதிந்து அதிலிருந்து JSON File ஜெனரேட் பண்ணி அதை இணையதளத்தில் ஏற்ற வேண்டும். இது பழைய ஆட்களுக்கும் எளிதில் புரியப் போவதில்லை. புதிய ஆட்களுக்கும் புரியப் போவதில்லை. Intaxsevaவில் ITதொழில்நுட்பம் மற்றும் வருமானவரி கணக்கியல் இரண்டிலும் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவதால் எங்களால் இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் படிவத்தை தயார் செய்து வைத்து விட்டோம்.
உங்கள் வருமான வரி தக்கல் படிவத்தை இப்பொழுதே தயார் செய்து வைத்திருந்தால் இணையத்தில் திறந்து விடப்படும்போது விரைவாக தக்கல் செய்துவிடலாம் அதனால் உங்களது கணக்கில் பிடிக்கப்பட்ட வரி விரைவில் திரும்பி கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வருமான வரியாக கட்டிய தொகை முழுமையாகவோ அல்லது அதிகபட்சம் எவ்வளவு திரும்பக் கிடைக்கவைக்க முடியுமோ எங்களால் வாங்கி கொடுக்க முடியும்.
8903330035 / 9894489035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொண்டு உங்களது வருமான வரி தாக்கலை விரைவாக முடித்துவிடுங்கள்.