4 ஆண்டுக்கு முன்பிலிருந்தே பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இதில் தொழில் கூட்டு பத்திரமும் அடங்கும்.பெரும்பாலோனோருக்கு இந்த தளம் (tnreginet.gov.in) இன்றளவிலும் சென்றடையவில்லை.பத்திர பதிவிற்கு இன்னும் பதிவுத் துறை அலுவலர்களையே நாடுகிறார்கள்.இதனால் அவர்களின் நேரமும்,பணமும் வீணாவதை காணமுடிகிறது.
ஆன்லைன் மூலம் கூட்டுத்தொழில் பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள் ஆதார் கார்டு,பான் கார்டு,ஓட்டுனர் உரிமம்,இமெயில் ஐ.டி, ஆதார் தொலைபேசி எண் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பரிந்துரைப்பவர்களும் சமர்ப்பிக்க வேண்டும்), இரண்டு பரிந்துரைப்பவர்களின் ஆவணங்களும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், பங்குதாரர்களின் பங்கினையும் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
கூட்டு பத்திரம் பதிவு செய்வதற்கு Stamp Duty யில் குறிப்பிட்டிருக்கும் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால் மட்டும் போதும், மேலும் பங்குதாரர்களின் பங்கினை பொறுத்து Stamp Duty யின் மதிப்பு வேறுபடும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய பின்பு நமது டாக்குமெண்ட் ஸ்டேட்டஸ் இணிஷியட் டோக்கன் என்று காட்டும்,அதனை கிளிக் செய்து பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து வாங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும், முன்பதிவு செய்த தேதியில் நேரடியாக நமது ஒரிஜினல் டாக்குமெண்டை கொண்டு அதிகாரியை சந்திக்க வேண்டும், நாம் ஆன்லைனில் கொடுத்திருக்கும் தகவல் நமது ஒரிஜினல் டாக்குமெண்ட் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சரியாக இருந்தால், அதிகாரி கையெழுத்திட்டு,சீல் வைத்து அன்றே கூட்டு பத்திரத்தின் ரெஜிஸ்ட்ரேஷனை சுலபமாக முடிந்துவிடுவர்.
இரண்டு முறையில் பத்திரம் வாங்கிக்கொள்ளலாம்….
ஒன்று ஆன்லைன் மூலம் Stamp Duty-யின் பணத்தை செலுத்தி பதிவு செய்த டாக்குமெண்டை பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு அதிகாரியை நேரில் சந்திக்கலாம் அல்லது சர்வீஸ்கானா பணத்தை மட்டும் ஆன்லைனில் செலுத்திவிட்டு பத்திரத்தை வெளியில் வாங்கி அதில் பிரின்ட் அவுட் எடுத்து அதிகாரியிடம் கையெழுத்து வாங்கிக்கொள்ளலாம் இதில் உங்களுக்கு எது சுலபமோ அதனை செய்து கொள்ளலாம்.
Intaxseva-வின் பரிந்துரையின்படி ஆன்லைனில் சர்வீஸ்க்கு மட்டும் பணம் செலுத்தி,வெளியில் பத்திரம் வாங்கி அதில் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.