வருசம் ₹12.75 லட்சம் சம்பளம் வாங்குறவங்களுக்கு Tax கிடையாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒருவேளை உங்க சம்பளம் ₹13 லட்சமா இருந்தா… நீங்க 63 ஆயிரம் ரூபாய் Tax கட்டணுமா? இத கேட்டா கொஞ்சம் பகீர்னு தான் இருக்கும். ஆனா உண்மை என்னனு சொல்றேன் கேளுங்க.
முதல்ல ₹12.75 Lakhs Salary எப்படி Tax Free ஆகுதுனு பாப்போம். உங்க மொத்த சம்பளம் ₹12,75,000-னா, Standard Deduction ₹75,000 கழிஞ்சிடும். பேலன்ஸ் Taxable Income ₹12 லட்சம். இதுக்கு புது Tax Slab படி Tax கணக்கு போட்டா ₹60,000 வரும். ஆனா, கவர்மெண்ட் Section 87A Rebate-படி அந்த ₹60,000-யும் அப்படியே தள்ளுபடி பண்ணி ZERO ஆக்கிருவாங்க. இப்படித்தான் Tax Zero ஆகுது.
இப்போ 13 லட்சம் வாங்குறவங்க மேட்டருக்கு வருவோம்:
Gross Salary ₹13,00,000.
Standard Deduction ₹75,000 போக, Taxable Income ₹12,25,000.
இதுக்கு Tax எவ்ளோ தெரியுமா? மொத்தம் ₹63,750 வரும்!
இப்போ உங்களுக்கு ஒரு டவுட் வரும்.. ‘12.75 லட்சத்தை விட நான் Extra-வா வாங்குறதே வெறும் 25 ஆயிரம் தான். அதுக்காக நான் எப்படி 63 ஆயிரம் Tax கட்ட முடியும்?’-னு தோணும்.
இங்க தான் Government ஒரு சூப்பரான சலுகை வச்சிருக்காங்க.. அதுக்கு பேரு தான் ‘Marginal Relief’. வெறும் 25 ஆயிரம் extra சம்பாதிச்சதுக்கு, 63 ஆயிரம் Tax கட்ட சொல்றது அநியாயம்-னு Government-க்கு நல்லாவே தெரியும்.
அதனால Marginal Relief ரூல் படி: ‘நீங்க limit-அ விட extra-வா சம்பாதிச்ச அந்த ₹25,000-அ மட்டும் அதிகபட்ச Tax-ஆ கட்டுனா போதும்’. மீதி வரியை கட்ட வேண்டாம்! அப்படினு தள்ளுபடி பண்ணிடுவாங்க. இப்படி தான் Tax Calculation வேலை செய்யுது.
இப்போ உங்களுக்கு Tax Calculation and Marginal Relief பத்தி நல்லா புரிஞ்சுருக்கும்னு நம்புறேன். இந்த மாதிரி இன்னும் நிறைய Tax அப்டேட்ஸ்க்கு நம்ம Intaxseva-அ Follow பண்ணிக்கோங்க.
