நம்ம tax consultancy-ல ITR file பண்ணும் போது நிறைய பேர் தொடர்ந்து கேக்குற ஒரு கேள்வி, “வெளிநாட்டு exchange-ல Crypto வாங்கி வச்சிருந்தா Government-க்கு எப்படி தெரியும்?” அப்படிங்கிறது தான். இதுவரைக்கும் அந்த சந்தேகத்துக்கு ஒரு gap இருந்தது உண்மை தான். ஆனா இனிமே அந்த வேலையே நடக்காது.
Income Tax Department இப்போ Crypto transactions-அ strict-ஆ track பண்ண புது rules கொண்டு வந்திருக்காங்க. இது January 1, 2026-ல இருந்து அமலுக்கு வருது. இத பத்தி தெளிவா பார்ப்போம்.
பழைய நிலைமை:
இதுவரைக்கும் நம்ம ஊரு bank-ல பணம் போட்டா அது Income Tax Department-க்கு தெளிவா தெரியும். ஆனா foreign app-லயோ, foreign Crypto exchange-லயோ Bitcoin வாங்குனா, அது நம்ம Government-க்கு அவ்வளவா தெரியாது. இத வச்சு நிறைய பேர் tax evade பண்ணிட்டு இருந்தாங்க.
புது நிலைமை (CRS System):
இப்போ Government ‘CRS’ (Common Reporting Standard) அப்படிங்கிற system உள்ள Crypto-வ கொண்டு வந்துட்டாங்க. இத புரியிற மாதிரி சொல்லணும்னா, உலகத்துல இருக்கிற எல்லா நாட்டு tax departments-உம் சேர்ந்து ஒரு பெரிய WhatsApp group ஆரம்பிச்ச மாதிரி. நீங்க Dubai, US-னு எந்த நாட்டு Crypto app-ல invest பண்ணாலும், அந்த நாட்டு Government நம்ம Indian Income Tax Department-க்கு automatic-ஆ report அனுப்பிடுவாங்க. உங்க investment details எல்லாம் direct-ஆ share ஆகிடும்.
Financial Asset Classification:
இனிமே Crypto-வ சும்மா internet பணம்-னு சொல்ல முடியாது. உங்க bank balance, share market investment மாதிரி இதையும் ஒரு முறையான ‘Financial Asset’ லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க. எல்லா Crypto companies-உம் அவங்க customers-ஓட data-வ, எவ்வளவு பணம் மாத்துறாங்க அப்படிங்கிற details-அ Government-க்கு submit பண்ணியே ஆகணும்.
யாருக்கு Exemption உண்டு?
ஒரு சின்ன ஆறுதல் என்ன-னா, உங்க Crypto wallet-ல balance roughly $10,000 (கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய்)-க்கு கீழ இருந்தா, இந்த strict reporting-ல இருந்து கொஞ்சம் exemption கிடைக்கும்.
சுருக்கமா சொல்லணும்-னா, இனிமே Crypto-வ வெளிநாட்டுல வாங்கி ரகசியமா பதுக்கி வைக்க முடியாது. எப்படி bank account-அ Government கண்காணிக்கிறாங்களோ, அதே மாதிரி Crypto-வையும் strict-ஆ கண்காணிக்கப் போறாங்க. Correct-ஆ ITR-ல கணக்கு காட்டி, tax கட்டுறது தான் எப்போவுமே safe.
