தினசரி ITR file பண்றப்போ clients அதிகமா கேக்குற கேள்வி, “Capital Gains Tax-ல இருந்து எப்படி தப்பிக்கிறது?” அப்படிங்கறது தான். Section 54F படி வீடு வாங்குனா Full Exemption வாங்கலாம்னு நமக்கு தெரியும். ஆனா, ஒரு சின்ன Technical தப்பு நடந்தா கூட IT Department notice அனுப்பிடுவாங்க. அப்படி நடந்த ஒரு சுவாரஸ்யமான real incident தான் இது.
என்ன பிரச்சனை ஆச்சு.?
Pune-வை சேர்ந்த ஒருத்தர் சமீபத்துல தன்னோட நிலத்தை ₹3.21 கோடிக்கு வித்துட்டு, அதே பணத்தை வச்சு ₹4 கோடிக்கு ஒரு புது வீடு வாங்கியிருக்காரு. Section 54F-ல Full Tax Exemption வேணும்னு ITR-ம் file பண்ணிட்டாரு. ஆனா Income Tax Department இதை reject பண்ணிட்டாங்க!
காரணம் என்ன தெரியுமா? Rules படி நிலம் வித்த காசை உடனே புது வீட்ல invest பண்ணலனா, ITR file பண்றதுக்கு முன்னாடி Capital Gains Account Scheme (CGAS) அப்படிங்கிற special bank account-ல அந்த பணத்தை deposit பண்ணனும். இவரு total amount-ஐயும் deposit பண்ணாம, balance இருந்த ₹91.45 லட்சத்தை deposit பண்ணாம விட்டுட்டாரு.
இத ஒரு பெரிய technical mistake-ஆ காட்டி, “இந்த 91 லட்சத்துக்கு நீங்க Tax கட்டியே ஆகணும்”னு Department notice அனுப்பிட்டாங்க.
ITAT Pune கோர்ட்டின் சூப்பர் Judgement.!
அவர் சும்மா விடல, ITAT (Income Tax Appellate Tribunal) Pune-ல appeal பண்ணாரு. Court கொடுத்த judgement உண்மையிலேயே investors-க்கு பெரிய relief: “இந்த Section 54F-ஓட main purpose-ஏ Real Estate-ல invest பண்ண வைக்கிறது தான்; வெறும் bank account-ல பணத்தை block பண்ணி வைக்கிறது இல்ல!”
“அவரு நிலம் வித்த காச விட அதிகமா (₹4 கோடி) புது வீடு வாங்குறதுல கரெக்டா குறிப்பிட்ட time limit-குள்ள invest பண்ணிட்டாரு.”
“CGAS account-ல பணம் deposit பண்ணாதது ஒரு சின்ன technical தப்பு தான். Genuine-ஆ investment நடந்திருக்கப்போ, Tax exemption-அ deny பண்ண கூடாது”-னு சொல்லி அவருக்கு full Exemption-ம் கொடுத்துட்டாங்க!
நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்:
நம்ம Investment genuine-ஆ நடந்திருந்தா, சின்ன technical mistake-க்காக பயப்பட தேவையில்லை. Court எப்பவுமே genuine investors-க்கு support பண்ணும் (Karnataka High Court கொடுத்த ஒரு பழைய judgement-ஐயும் இதுக்கு reference-ஆ காட்டுனாங்க). இருந்தாலும், முடிஞ்ச வரைக்கும் CGAS rules-அ கரெக்டா follow பண்றது எப்பவுமே safe!
Tax planning & ITR filing பத்தி ஏதாவது doubts இருந்தா comment பண்ணுங்க!
