வருமான வரியில் மருத்துவ செலவுகளை section 80D மூலம் மட்டும்தான் வரி விலக்கு பெற முடியும் என்று நினைக்கிறீர்கள். இந்த section-யை தவிர்த்து 80DD என்கிற section-வும் உண்டு. இந்த section மூலம் தனிநபர் மற்றும் HUF மட்டுமே வரி விலக்கு பெறமுடியும்.
வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், உங்களை சார்ந்திருப்பவர்கள் ஊனமுற்றவர்களாக இருந்து, அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு ஏதேனும் பண்ணியிருந்திங்கனா அந்த செலவுகளை காமிச்சு வரி விலக்கு பெறலாம்.
இந்த section மூலமா வரி விலக்கு பெறுவதுற்கு ஊனத்தின் தன்மை 40%-க்கு கீழே இருக்கக்கூடாது. இதன் மூலம் உங்களை சார்த்திருப்பவர்களுக்கு செய்த செலவுகளை மட்டுமே claim பண்ணமுடியும். தனுக்குத்தானே மருத்துவ செலவு செய்திருந்தால் இதில் claim பண்ணமுடியாது.
உங்களை சார்த்திருப்பவர்கள் என்றால் உங்களது, Spouse, Brother, Sister, Children, Mother, Father இவர்களுக்கு செய்த மருத்தவ செலவுகளை மட்டுமே claim செய்யமுடியும்.
ஊனத்தின் தன்மை 40%-லிருந்து 80% வரை இருந்தால் 75000 வரையிலும், 80% மேல் இருந்தால் 125000 வரையிலும் வரி விலக்கு பெற முடியும்.