பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரியில் 3 அதிரடி மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பரிந்துரைகள் பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுள்ளது.
- புதிய வரி முறையில் standard deduction-யில் வரம்பு மாற்றப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 50000-லிருந்து இந்தாண்டு 75000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, வரும் நிதியாண்டில் 75000-லிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய வரி முறையில் 12 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20% tax கட்டவேண்டியிருந்தது. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30% கட்டவேண்டியிருக்கிறது. அதை வரும் நிதியாண்டிலிருந்து 12 லட்சத்திலிருந்து 20 லட்சம் வருமானம் வரை 20% tax slap rate உள்ள கொண்டுவரப்போவதாகவும், இனிமேல் 20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% tax slap கொண்டுவரப்போவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- நாம் பின்பற்றும் இந்த வருமான வரி சட்டம் 1961-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், பெரிய அளவில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பழைய வருமான வரி சட்டத்தில் 298 பிரிவுகள் உள்ளன, 23 அத்தியாகங்கள் உள்ளன. இதை, 60% குறைத்து 298 பிரிவுகளிருந்து 120 பிரிவுகளாக குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வரி முறையை நிறுத்திவிட்டு புதிய வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரியில் எந்தளவு மாற்றம் கொண்டுவரப்போறாங்க, அப்படிங்கிறது, வருகின்ற பட்ஜெட் தாக்குதலின் போதுதான் தெரியவரும்.