வருமான வரித் துறையிடம் இருந்து வரிக் கோரிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது வேறு சில மதிப்பீட்டு ஆண்டிற்காக அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப்பெறும் போது இந்தத் தகவல் பெறப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 245, வரி செலுத்துவோரிடமிருந்து நிலுவையில் உள்ள எந்தவொரு வரிக் கோரிக்கைக்கும் எதிராகத் திரும்பப்பெறுதலை (அல்லது பணத்தைத் திரும்பப்பெறுதலின் ஒரு பகுதியை) சரிசெய்ய மதிப்பீட்டு அதிகாரிக்கு (AO) அதிகாரம் அளிக்கிறது. எளிமையான வார்த்தைகளில், ஐடி துறையானது உங்களிடமிருந்து பெற வேண்டியவேண்டிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ,இந்த அறிவிப்பை அனுப்புகிறது.
பிரிவு 245 இன் கீழ் தகவல்களுக்கு பதிலளிக்காததால் ஏற்படும் விளைவுகள்:
தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் பிரிவு 245ன் கீழ் நீங்கள் அதற்கான பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும். 30 நாட்களுக்குள் நீங்கள் அறிவிப்புக்கு பதிலளிக்கவில்லை என்றால், அந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வரை மாதமாதம் நீங்கள் கட்டவேண்டிய அசல் தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.
பிரிவு 245 இன் கீழ் அறிவிப்புக்கு எப்படி பதிலளிப்பது:
பிரிவு 245 இன் கீழ் நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறும்போது 30 நாட்களுக்கு பதலளிக்கவேண்டும். உங்களுடைய E-Portal-இல் இந்த அறிவிப்புக்கான பதிலை அளிக்கவேண்டும். இந்த அறிவிப்பு சரியானது அல்லது தவறானது என்று முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிலளிக்கலாம்.