லிமிடெட் நிறுவனம் அதாவது வரையறுக்கப்பட்ட நிறுவனம் ஒரு கூட்டுத் தொழில் நிறுவனம் செயல்படும்போது தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்தின் கடன் தொகைக்கு உரிமையாளர்கள் பொருப்பாவார்கள்.
ஒரு தொழில் விரிவாக்கப்படும் போதோ அல்லது பெரிய அளவில் தொடங்கும் போதோ இத்தகைய பொறுப்புக்களை தவிர்க்கவும் மற்றும் பல்வேறு நிர்வாக வசதிக்காகவும் வரையறுக்கப்பட்ட நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் கடன் என்பது அவர்கள் முதலீடு செய்த பணம் அளவிற்கே வரையறுக்கப்படுகிறது இதுவே வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம் அதாவது லிமிடெட் கம்பெனியின் கடனுக்கு பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள் ஒருவேளை தொழில் நிறுவனம் திவால் ஆகும் பட்சத்தில் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் நிறுவனத்தின் சொத்துக்களை மட்டும் கையகப்படுத்தும் உரிமை கடன் கொடுத்தவருக்கு உண்டு, நிறுவனத்தின் பங்குதாரர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்து எந்தவித உரிமையும் கோர முடியாது.
அதாவது தனிப்பட்ட சொத்தை விற்று கடனை அடைக்க வேண்டும் என்ற விதி கிடையாது ஏனென்றால் தனி நபராக பார்க்கப்படுகிறது இதில் இரண்டு வகை உள்ளது முதலில் பிரைவேட் லிமிடெட் கம்பெனி அதாவது தனிநபர் பங்கு நிறுவனம் அல்லது தனிநபர் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம், இந்த நிறுவனத்தை உருவாக்க குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயும் ஒரு மாத கால நேரமும் தேவை இதில் அதிகபட்சம் 200 நபர்கள் வரை பங்குதாரர்களாக சேரலாம் தொழில் சிறப்பாக செயல்பட்டு விரிவாக்கம் செய்தால் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி எடுக்கலாம் என்ற நிலைமை இருக்கும்பொழுது நிறுவனத்திற்கு தேவைப்படும் மூலதனத்தை பெறாமல் அவற்றை பங்குகளாக மாற்றி முதலீட்டாளர்கள் கொண்டு எல்லாம் அவர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு நிறுவனத்தின் பங்கு கேட்பார்கள் பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் போது அந்த நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்களை அதிகம் விரும்புவார்கள் ஏனென்றால் இத்தகைய நிறுவனத்தில் ஒருமுறை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் ஒருவரை அந்த நிறுவனத்தில் இருந்து யாரும் எளிதில் வெளியேற்ற முடியாது.
பொதுமக்களிடம் பங்கை விற்பனை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இதுமட்டுமில்லாமல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உருவாக்குவதற்கு லாபகரமான பல விஷயங்கள் இருக்கின்றன.