2025ஆம் ஆண்டில், இந்திய அரசு எடுத்த முக்கியமான இரண்டு அறிவிப்புகள் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த முடிவுகள் பொதுமக்கள், குறிப்பாக middle class மக்களுக்கு நன்மை தருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் என்னென்றால்:
1. ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு :
முந்தைய வரி விதிமுறைகளில், ஆண்டுக்கு ₹5 லட்சம் வருமானத்திற்கு மட்டுமே முழு வரிவிலக்கு கிடைத்தது. ஆனால் தற்போது, அரசு அதை நேரடியாக ₹12 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் பெரிய அளவில் middle class மற்றும் upper middle class குடும்பங்களுக்கு நேரடி நன்மை ஏற்படும். இதுவரை அவர்கள் சம்பளத்திலிருந்து ஒரு முக்கியமான பகுதியை வரியாக செலுத்திக் கொண்டிருந்தனர். இப்போது அந்த தொகையை சேமிக்கலாம், அல்லது தேவையான இடங்களில் செலவிடலாம் — குழந்தைகள் கல்வி, வீட்டு construction, மருத்துவ செலவுகள் போன்றவற்றுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. GST குறைப்பு – 12% → 5% :
அடுத்த முக்கிய அறிவிப்பு: பொதுப் பொருட்கள், குறிப்பாக day-to-day consumer goods மீது விதிக்கப்பட்ட Goods and Services Tax (GST) விகிதம் 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது – “இந்த நேரத்தில் ஏன் திடீரென்று GST குறைக்கப்படுகிறது?” அதற்கான விடை மிக எளிது: விலை குறைந்தால் மக்கள் அதிகம் வாங்குவார்கள். வாடிக்கையாளர் வாங்கும் அளவு அதிகரித்தால், விற்பனையாளர் லாபம் அடைவார். வியாபாரத்திலும், உற்பத்தி துறையிலும் வளர்ச்சி வரும். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதெல்லாம் சேர்ந்து இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
₹2.5 லட்சம் கோடி சேமிப்பு? :
அரசின் இரண்டு அறிவிப்புகள் மூலம் மக்கள் ₹2.5 லட்சம் கோடி வரை சேமிக்க முடியும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது சிறிய தொகை போலத் தெரிந்தாலும், மொத்தமாக இது பெரிய அளவிலான சேமிப்பாகிறது. மக்கள் இந்த சேமிப்பை மீண்டும் பொருட்கள் வாங்க செலவிடுவதால், அது பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
உண்மையிலேயே இது நமக்கு பயனா? :
இந்த அறிவிப்புகள் மிகவும் மக்களுக்கு சாதகமானவை என்பதை மறுக்க முடியாது, குறிப்பாக middle class மக்களுக்கு நிச்சயமாக நன்மை தரக்கூடியவை. மேலும் வரி விலக்கு மற்றும் GST குறைப்பு போன்ற நடவடிக்கைகள், பொதுமக்களின் வாழ்க்கையில் நிதிச்சுமையை குறைக்கும்.