1.Office-ல Claim பண்றதாயிருந்தா, முதலில் Rent Receipts கேப்பாங்க. நீங்க Rent Pay பண்றீங்க அப்படினா Landlord-கிட்ட இருந்து Rent Receipts கண்டிப்பா வாங்கிருக்கணும்,அப்போதான் HRA Claim பண்ணமுடியும்.
2.Valid Rental Agreement வச்சுருக்கணும். இத சில கம்பெனில கேப்பாங்க, சில கம்பெனில கேக்கமாட்டாங்க. ஆனால், எல்லா கம்பெனிலையும் Mandatory-யா Rent Receipts தான் கேப்பாங்க, Landlord sign பண்ண Document இருக்கனும்.
3.Banking Channel மூலமாதான் Rent Pay பண்ணனும். அதாவது Cash-அ Pay பண்ணாம, Banking Channel Pay பண்ணவேண்டும். இதுவும் ஒரு Valid Proof தான்.
4.Rent வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கு மேல இருந்தா Landlord Pan-அ நீங்க கம்பெனில Proof Submit பண்றமாறியிருக்கும். ஆனால், சில நேரம் கம்பெனில Claim பண்ணவில்லையென்றால், ITR Filing அப்போ Claim பண்றமாறியிருக்கும். அப்போ வந்து Landlord Pan கேக்காது.ஆனால், அந்த வருசத்துக்கு Landlord Pan வாங்கிவச்சிருக்கணும். ஏனா, வருமான வரி துறையிலிருந்து Proof Submit பண்ணச்சொன்னாங்கன்னா நாம Submit பண்ணனும்.
5.Rent-அ குடும்ப உறுப்பினருக்கு Pay பண்றது. குடும்ப உறுப்பினருக்கு Pay பண்றது Problem இல்லை. ஆனால், யாருக்கு Pay பண்றோம் அப்டிங்கிறதத்துக்கு Document வச்சிருக்கணும். யாருக்கு Pay பண்றிங்களோ அவங்க ITR File பண்றாங்களா உங்ககிட்ட இருந்து வாங்குன Rent-யை Income-அ காமிச்சுருக்காங்களானு Confirm பண்ணிக்கோங்க.