பிரச்சனை எப்படி ஆரம்பிச்சது.?
சமீபத்துல GST Portal-ல ஒரு புது system கொண்டு வந்தாங்க. அதாவது, போன மாசத்து Invoices-ஐ யாராவது current month GSTR-3B-ல late-ஆக Report பண்ணா, அவங்களுக்கு Section 50-ன் படி Interest correct-அ Calculate பண்ணனும். அதுக்காக Payment Page-ல “Tax Liability Breakup, As Applicable” அப்படின்னு ஒரு புது Tab-ஐ add பண்ணாங்க.
உண்மையான Portal Glitch என்ன.?
ரூல்ஸ் படி பார்த்தா, Late Invoices காட்டுறவங்களுக்கு மட்டும்தான் இந்த Tab Mandatory-ஆக இருந்திருக்கணும். ஆனா System Error காரணமா, எந்த Late Invoices-உம் இல்லாத சாதாரண Taxpayers-க்கும் இந்த Tab-ஐ ஓபன் பண்ணி Confirm பண்ணாதான் GSTR-3B File பண்ண முடியும்னு Portal Restrict பண்ணிடுச்சு. இதனால நிறைய பேருக்கு Return File பண்ண முடியாம பெரிய குழப்பம் ஆச்சு.
GSTN-ன் விளக்கம் மற்றும் தீர்வு:
இப்போ GSTN இந்த தப்பை Officially ஒத்துக்குறாங்க. சீக்கிரமே இந்த System Glitch-ஐ சரி பண்ணிடுறோம்னு சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் Returns File பண்றதுக்கு அவங்க ஒரு Interim Workaround கொடுத்திருக்காங்க.
அந்த Workaround Steps இதோ:
உங்களோட GSTR-3B Payment Page-க்கு போங்க. உங்களுக்கு எந்த Late Invoice Reporting இல்லைனாலும், அங்கே இருக்குற “Tax Liability Breakup, As Applicable” Tab-ஐ கிளிக் பண்ணி Open பண்ணுங்க. உள்ளே எந்த Data-வும் Change பண்ண வேண்டாம். அப்படியே “Save” Button-ஐ மட்டும் கிளிக் பண்ணிடுங்க. இப்போ Portal உங்களை வழக்கம் போல EVC அல்லது DSC யூஸ் பண்ணி GSTR-3B File பண்ண Allow பண்ணிடும்.
இது Portal முழுசா ரெடி ஆகுற வரைக்கும் ஒரு Temporary Solution மட்டும்தான். ஆனா Filing Date நெருங்குற இந்த நேரத்துல, Returns Pending வைக்காம இருக்க இந்த வழிமுறையை நாம Follow பண்ணலாம்.
நீங்க உங்க Office-ல GSTR-3B File பண்ணும்போது இந்த Error வந்துச்சா? இந்த Workaround யூஸ் பண்ணி File பண்ணிட்டீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!
