நம்மல நிறைய பேருக்கு மாசச் சம்பளம் வரும். அதுபோக தாத்தா காலத்து வீட்டு வாடகை, குடும்பமா சேர்ந்து பண்ற பிசினஸ் லாபம்னு எக்ஸ்ட்ரா வருமானமும் வரும். இது எல்லாத்தையும் அவங்களோட ‘ஒரே PAN கார்டுல’ காட்டி, சம்பாதிக்கிற முக்காவாசி காசை Tax-ஆவே கவர்மெண்ட்டுக்கு கொடுத்துட்டு இருப்பாங்க!
நீங்களும் இதே நிலைமையில கஷ்டப்படுறீங்களா? அப்போ வரியை லீகலா மிச்சம் பண்ண நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு சூப்பர் சீக்ரெட் தான், HUF (Hindu Undivided Family).
குடும்பத்துக்குனு ஒரு PAN கார்டு.!
உங்களுக்குனு தனியா ஒரு PAN கார்டு இருக்கிற மாதிரி, இன்கம் டாக்ஸ் ரூல்ஸ்படி உங்க குடும்பத்துக்குனு தனியா ஒரு PAN கார்டு வாங்கலாம்! ஒரு சின்ன ‘HUF பத்திரம்’ (Deed) ரெடி பண்ணி இதை ரொம்ப ஈஸியா ஓபன் பண்ணிடலாம்.
இத வச்சு எப்படி Tax மிச்சம் பண்றது.? ரொம்ப சிம்பிள் பாஸ்.!
உங்க சொந்த உழைப்புல வாங்குற மாச சம்பளத்தை மட்டும் உங்க பர்சனல் அக்கவுண்ட்ல காட்டுங்க. அந்த பூர்வீக வீட்டு வாடகை, குடும்ப பிசினஸ் லாபத்தை எல்லாம் இந்த ‘குடும்ப PAN கார்டு’ (HUF) கணக்குல காட்டுங்க.
Double Benefit Offer.!
உங்களுக்கு எப்படி உங்க சொந்த அக்கவுண்ட்ல 1.5 லட்சம் வரிச்சலுகை (Section 80C), Home loan Benefit-லாம் கிடைக்குதோ, அதே மாதிரி அந்த HUF அக்கவுண்ட்டுக்கும் எக்ஸ்ட்ராவா 80C, Home Loan-னு தனி சலுகைகள் கிடைக்கும். வருமானத்தை இப்படி பிரிச்சு காட்டுறதால Tax பாதிக்கு பாதி குறைஞ்சிடும்! ஒரே வீட்ல Double Benefit.
2 முக்கியமான கண்டிஷன்ஸ் இருக்கு:
சிங்கிள்ஸ்க்கு கிடையாது: இந்த குடும்ப அக்கவுண்ட் ஓபன் பண்ண, ஃபர்ஸ்ட் உங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கணும்! கல்யாணம் ஆனவங்க மட்டும்தான் இதை ஓபன் பண்ண முடியும்.
சம்பளத்தை போடக்கூடாது: “டாக்ஸ் மிச்சம் ஆகுதே”னு உங்க ஆபீஸ் மாச சம்பளத்தை எடுத்து இந்த HUF அக்கவுண்ட்ல காட்டவே கூடாது. மாட்டுனா பெரிய சிக்கல் ஆகிடும். இது வெறும் ‘குடும்ப வருமானத்துக்கு’ (Family Income) மட்டும்தான்.
சரியான பிளானிங் இருந்தா நம்ம பணத்தை நாமளே லீகலா மிச்சம் பண்ணலாம்! இந்த ஐடியாவை உங்க ஆடிட்டர்கிட்ட கேட்டு உடனே பிளான் பண்ணுங்க.
இந்த போஸ்ட் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்தா, “Tax கட்டியே என் உசுரு போகுதுடா”னு ஃபீல் பண்ற உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
தொடர்ந்து இதே மாதிரி ஈஸியான Tax டிப்ஸ்களுக்கு நம்ம Intaxseva Page-யை மறக்காம follow பண்ணுங்க!
