GST Register செய்தவர்கள் மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B மட்டுமே தாக்கல் செய்திருப்பீர்கள். அதைத்தவிர்த்து, GSTR-9 அதாவது Annual Return தாக்கல் செய்யவும் வேண்டும். இதை பற்றி உங்களுக்கு தெரியுமா, இந்த பதிவில் Annual Return அப்டினா என்னனு பாக்கலாம்.
Annual Return அப்படிங்கிறது நீங்கள் Financial Year-இல் செய்த மொத்த Inward மற்றும் Outward Supply-காண Statement-யை Submit செய்யவேண்டும். இத நாம மாதமாதம் GSTR-1 மற்றும் GSTR-3B மூலமா தாக்கல் செய்வோம். ஆனால், இந்த இரண்டையும் வருடாவருடம் மொத்தமாக சேர்த்து ஒரே Statement -ஆக GSTR-9 அதாவது Annual Return தாக்கல் செய்யவேண்டும்.
இதைத்தவிர்த்து, Audit Report மற்றும் Turn Over Details எல்லாவற்றையும் தாக்கல் செய்யவேண்டியிருக்கும்.
இப்ப Annual Return-னா என்னனு பாத்தாச்சு, ஆனால் இத கட்டாயம் எல்லாரும் தாக்கல் செய்யவேண்டுமா என்று கேட்டீங்கன்னா, எல்லோரும் கட்டாயம் தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை, அப்ப யாருதான் இந்த Annual Return-அ Submit பண்ணனும், யாருக்கெல்லாம் Turn Over 2 கோடிக்கு மேல் இருக்குதோ அவர்கள் எல்லாம் இந்த Annual Return கண்டிப்பான முறையில் தாக்கல் செய்யவேண்டும்.
இந்த Annual Return செய்யவேண்டியவர்கள், தாக்கல் செய்யதவறினீர்கள் என்றால் உங்களுக்கு ஒருநாளைக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும்.
இந்த Annual Return-லையே பல்வேறு வகைகள் இருக்கு அது என்னென்னு பாத்தீங்கன்னா,
• GSTR-9
• GSTR-9A
• GSTR-9B
• GSTR-9C
GSTR-9 அப்படிங்கிறது, மாதமாதம் நீங்கள் தாக்கல் செய்யும் GSTR-1 மற்றும் GSTR-3B இவை இரண்டையும் மொத்தமாக சேர்த்து ஒரே Statement-ஆக வருடாவருடம் தாக்கல் செய்யவேண்டும்.
GSTR-9A அப்படிங்கிறது,நீங்கள் Composition Scheme-ல Register செய்திருந்திங்கனா இந்த படிவத்தை தாக்கல் செய்யவேண்டும்.
GSTR-9B-னா, E-Commerce Business யாரெல்லாம் செய்கிரீர்களோ அவர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்யவேண்டும்.
GSTR-9C-னா, உங்களுடைய Turn Over 5 கோடிக்கு மேல் போகும்போது நீங்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்யவேண்டும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.