உஷார் மக்களே,சமீபகாலமாக ATM Call மோசடி அதிகரித்து வருகிறது, அதன் வரிசையில் தற்பொழுது Fake Email மோசடியும் அதிகரித்து கொண்டுவருகிறது.
Fake Email மோசடியானது வருமான வரித்துறையையும் விட்டுவைக்கவில்லை, தற்பொழுது வருமான வரித்துறையிலிருந்து பணம் கட்டுமாறும் அல்லது உங்களுக்கு Refund Amount உள்ளது அதை பெறுவதற்கு கீழேயுள்ள “Link”-யை Click செய்யவும் என்றும் Fake-ஆக Mail-களை அனுப்பி நூதனமாக,மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இருதினங்களுக்கு முன்பாக எங்களது வாடிக்கையாளர் ஒருவர் வருமான வரித்துறையிலிருந்து Refund Amount உள்ளது என்று Mail ஒன்று வந்துள்ளது என்று கூறி, அந்த Mail-ளை எங்களுக்கு அனுப்பினார். நாங்கள் அதை Check செய்து பார்த்தபொழுது Fake-ஆக ஒரு ID-யை Create பண்ணி நூதனமாக அனுப்பியுள்ளனர்.
பிறகு, அவருக்கு நாங்கள் Call பண்ணி சார், பயப்படவேண்டாம் இது Fake-ஆக உங்களுக்கு அனுப்பியுள்ளனர் என்றும், நீங்கள் அந்த “Link” Click செய்திருந்தால் “உங்களுடைய Details எல்லாம் எடுத்திருப்பார்கள், அதுமட்டுமில்லால் உங்கள் Account-இல் உள்ள பணத்தை கூட இழக்கும் அபாயம் கூட வந்திருக்கலாம்” என்றும் கூறினோம். அதற்கு அவர் நல்ல வேலை சார், “உங்களிடம் ஆலோசனை கேட்காமல் அந்த “Link”-யை செய்திருந்தால் என்ன ஆயிருக்கும்” நன்றி சார் என்றார்.
இதேபோல், Fake-ஆக Mail வந்தால் பயப்படவேண்டும், விழிப்புடன் இருங்கள்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.