ஒரு வருடத்தில் உங்களுக்கு 10000 ரூபாய்க்கு மேல income tax liability இருக்கு அப்டினா 15th மார்ச் அதுக்குள்ள நீங்க அதை கட்டனும். Senior citizens Tax கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது நீங்க ஒரே ஆண்டில் 2 கம்பெனியில் வேலை பார்த்திருக்கிங்க அப்டினா 2 employer கிட்ட இருந்து கெடச்ச salary-யயும் கூட்டி Total Tax Liability எவளோ வருதுன்னு பாருங்க அதுல Tax pay பண்றமாதிரி இருக்குதுனா இப்போவே அதை கட்டிருங்க இது மட்டுமில்லை வேற எதுவும் உங்களுக்கு கூடுதல் வருமானம் இருந்தாலோ அதாவது Bank interest, Rent, dividends or Capital gains இருந்ததுனா நீங்க மார்ச் 15ம் தேதிக்குள்ளேயே வரியைக் கணக்கிட்டு Advance வரி செலுத்துவது நல்லது. இது இல்லாம நீங்க எதாவது ஒரு Property ஐ வித்திருக்கீங்க அது உங்களுக்கு short-term or long-term ல வருதான்னு பார்த்துக்கோங்க. அதையும் இப்போவே கட்டிருங்க. இல்ல ஜூன், ஜூலைல Returns File பண்ணும் போது சேர்த்து கட்டிக்குறேன் அப்டினு சொன்னிங்கன்னா உங்களுக்கு Interest and Penalties கட்டி File பண்ற மாறி இருக்கும்.