Bank-ல Loan வாங்குறதுக்கு செக்யூரிட்டி அல்லது assurance கேப்பாங்கதானே, ஆனால் நாம் ஒரு Seller-யிடமிருந்து பொருள்களை “Credit-யில்” வாங்குறதுக்கு ஒரு Bank-யை செக்யூரிட்டி அல்லது assurance காண்பிச்சு வாங்கிக்கலாம்.
அது எப்படினு பாத்தீங்கன்னா, உதாரணத்துக்கு, Seller ஒரு Place-ளையும் Buyer ஒரு Place-ளையும் இருகாங்க வச்சுப்போம். Buyer-க்கு Seller-கிட்ட இருந்து பொருள்களை Credit-ல வாங்கணும்னு ஆசை. ஆனால் Seller-க்கு Buyer மேல நம்பிக்கை இல்லை, ஏனா அவருக்கு Buyer-அ பற்றி எந்த details தெரியாது. அதனால் Seller Comfort தரமாறி Buyer-யிடம் செக்யூரிட்டி அல்லது Documents Proof தருமாறு கேட்கிறார்.
Buyer-க்கு ஒரு Option இருக்கு உங்களுக்கு Credit facility தரக்கூடிய Bank-யிடம் சென்று இந்த நிலைமையை எடுத்து சொன்னால் அவங்க ஒரு offer பண்ணுவாங்க அதுதான் “Letter of Credit”. Letter of Credit அப்டினா, Bank அந்த Seller-க்கு ஒரு Letter அனுப்புவாங்க, அதுல என்ன இருக்கும்னு பாத்தீங்கன்னா நீங்க அந்த பொருள்களை அவருக்கு கொடுங்க, அவர் அதற்கான பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிடுவார்.
அவர் பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் தரவில்லையென்றால், எங்களுடைய Bank அந்த பணத்தை உங்களுக்கு கொடுத்துவிடுவோம் என்று அந்த letter-யில் இருக்கும். Suppose குறிப்பிட்ட தேதியில் பணத்தை தரவில்லையென்றால், அந்த seller நேராக அந்த Bank-யிடம் கேக்கலாம். Bank-வும் இரண்டு நபர்களுக்கு இடையே transaction நடக்கும்பொழுது அவர்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் அனைத்தும் சரியாக இருந்தால் Bank அந்த பணத்தை அந்த seller -க்கு கொடுத்துருவாங்க, Bank அவங்க கொடுத்த பணத்தை Buyer-கிட்ட இருந்து வாங்கிருவாங்க.