மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது, 2022-23 நிதியாண்டில் (Financial Year) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். 2023-24-ம் (Assessment Year) ஆண்டுக்கான புதிய மதிப்பீட்டு ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இதே தேதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில், பல்வேறு காரணங்களுக்காக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு கால நீட்டிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய ஐடிஆர் படிவங்களை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்துள்ளது.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.