“ஏப்ரல் 1, 2026-ல இருந்து புது Income Tax Act (2025) வரப்போகுதே… அப்போ இந்த வருஷம் ஜூன்/ஜூலை மாசம் நாம file பண்ணப்போற ITR-க்கு பழைய சட்டம் பொருந்துமா இல்ல புது சட்டம் பொருந்துமா?”
இப்போ நிறைய பேருக்கு இருக்கிற ரொம்ப பெரிய குழப்பமே இதுதான். ஒரு Tax Consultant-ஆக ரொம்ப சிம்பிளா இதுக்கு விளக்கம் சொல்றேன்:
இந்த வருஷம் (2026) நாம file பண்ணப்போற ITR-க்கு பழைய Income Tax Act (1961) விதிகள் தான் முழுமையா பொருந்தும்!
ஏன் அப்படிங்குறதை தெளிவா பார்க்கலாம்:
- நாம ITR File பண்றது எந்த நிதியாண்டுக்கு? (Financial Year)
இப்போ 2026-ல நாம ITR file பண்ணப்போறது, ஏப்ரல் 2025-ல இருந்து மார்ச் 31, 2026 வரைக்கும் (அதாவது FY 2025-26) நாம சம்பாதிச்ச பணத்துக்காக. இந்த வருஷம் முழுக்க பழைய 1961 சட்டம் தான் அமல்ல இருந்துச்சு. அதனால, பழைய Rules படி தான் நாம இப்போ ITR file பண்ணுவோம்.
- அப்போ புது சட்டம் (Income-tax Act, 2025) எப்போ நடைமுறைக்கு வரும்?
இந்த புது சட்டம் ஏப்ரல் 1, 2026-ல இருந்து தான் அமலுக்கு வருது. அதாவது, ஏப்ரல் 1-க்கு அப்புறம் நீங்க வாங்குற சம்பளம் மற்றும் வருமானத்துக்குத் தான் இந்த புது சட்டம் பொருந்தும். இதற்கான ITR-ஐ நாம அடுத்த வருஷம் (அதாவது 2027-ல) file பண்ணும் போது தான் இந்த புது Act-ஓட rules முழுசா apply ஆகும்.
- ஒரு முக்கியமான சந்தேகம் (Act vs Regime):
இங்க நிறைய பேர் பண்ற தப்பு என்னன்னா, பழைய/புதிய சட்டம் (Act) அப்படிங்குறதை, பழைய/புதிய வரி முறை (Old / New Tax Regime) கூட குழப்பிப்பாங்க. ரெண்டும் வேற வேற! இந்த வருஷம் (2026) ITR file பண்ணும் போது, வழக்கம்போல பழைய சட்டத்தில் உள்ள Old Tax Regime அல்லது New Tax Regime-ல் உங்களுக்கு எது லாபமோ அதை நீங்க தாராளமா தேர்ந்தெடுத்துக்கலாம்.
சுருக்கமா சொல்லணும்னா: இப்போதைக்கு புது சட்டத்தை பத்தி பயப்படவோ குழம்பவோ தேவையில்லை. வழக்கம் போல இந்த நிதியாண்டுக்கான (FY 2025-26) ITR-ஐ பழைய Rules படியே நிம்மதியா file பண்ணலாம்!
உங்களுக்கு ITR file பண்றதுல வேற ஏதாவது doubt இருந்தா Comment-ல கேளுங்க. Tax file பண்ண நேரடியாக நம்ம Tax Consultancy-ஐ contact பண்ணுங்க.
இந்த useful-ஆன தகவலை உங்க Friends மற்றும் Office Groups-க்கு share பண்ணுங்க! நிறைய பேருக்கு இந்த குழப்பம் இருக்கும்.
