ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்களுக்காக EPFO ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இனி PF பணத்தை வங்கி கணக்கு இல்லாமலேயே, UPI மூலம் நேரடியாக பெறும் வசதி ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த புதிய சேவை, குறிப்பாக தினசரி தேவைக்காக உடனடி பணம் தேவைப்படுபவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
EPFO புதிய UPI சேவை என்ன?
இதுவரை PF பணம் எடுக்க வங்கி கணக்கு IFSC Code, Account verification, 5–10 நாட்கள் processing time இவை எல்லாம் அவசியம். ஆனால், புதிய முறையில் UPI ID (Google Pay/ PhonePe/ Paytm) இருந்தாலே PF பணத்தை நேரடியாக பெறலாம்.
UPI மூலம் PF பணம் எடுக்கும் முறை (எதிர்பார்க்கப்படும் நடைமுறை) EPFO அறிவித்த தகவலின் அடிப்படையில் ,செயல்முறை இப்படியாக இருக்கும்:
முதலில் EPFO Member Portal / UMANG App-ல் login பண்ணனும், PF Claim option selects பண்ணனும் , Bank accountக்கு பதிலாக UPI option select பண்ணி, UPI ID enter (example: mobilenumber@upi) பண்ணனும் , OTP verification பண்ணி, Approval ஆனதும் → பணம் நேரடியாக UPI-க்கு transfer ஆகும். அதற்க்கு பின் 1–2 நாட்களுக்குள் பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு தொகை வரை UPI மூலம் எடுக்கலாம்.?
ஆரம்ப கட்டத்தில் ₹1,00,000 வரை PF தொகை UPI மூலம் பெற அனுமதி வழங்கப்படும் என தகவல். எதிர்காலத்தில் இந்த வரம்பு மேலும் உயர்த்தப்படலாம்.
யாருக்கு இந்த வசதி ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.?
வங்கி கணக்கு மாற்றம் செய்தவர்கள், IFSC mismatch பிரச்சனை உள்ளவர்கள், PF claim rejection face பண்ணுபவர்கள், Emergency-க்கு உடனடி பணம் தேவைப்படுபவர்கள், Digital payment-க்கு பழகிய இளைஞர்கள்.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.
UPI ID PF account holder பெயரில் இருக்க வேண்டும், Aadhaar – UAN – Mobile number link mandatory, KYC complete ஆகி இருக்க வேண்டும் , தவறான UPI ID கொடுத்தால் claim reject ஆகும்.
பழைய முறை புதிய முறை வித்தியாசம்:
- பழைய முறை: Bank account mandatory, claim settle ஆக 5–10 நாட்கள் ஆகும், IFSC / cheque verification மற்றும் அதிக rejection chance ஆக வாய்ப்பு உள்ளது.
- புதிய UPI முறை : Bank account தேவையில்லை, 1–2 நாட்களில் claim settle, UPI ID மட்டும் போதும் , குறைந்த rejection.
EPFO இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வந்தது.?
Digital India initiative, Claim processing speed அதிகரிக்க , Middle-class & daily wage employees-க்கு எளிதாக மற்றும் Fraud குறைக்க & transparency அதிகரிக்க.
UPI மூலம் PF பணம் எடுக்கும் இந்த புதிய வசதி, EPF உறுப்பினர்களுக்கு ஒரு gamechanger தான்.
