உங்கள் வருமான வரி அறிக்கை (ITR) “Processed” என வந்தாலும், பணம் (refund) வராதது பற்றி கவலைப்பட தேவையில்லை. 2025-26 நிதியாண்டுக்கான non-audit ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16, 2025 ஆகும். அக்டோபர் 5 நிலவரப்படி, மொத்தம் 7.68 கோடி ITR-கள் இந்த கோரிக்கைகள் முடிந்துள்ளன, அதில் 6.11 கோடி செயல்படுத்தப் பட்டுள்ளன, மேலும் 1.57 கோடி இன்னும் செயல்படுத்தப் படாமல் உள்ளன. வரி செலுத்துபவர்கள் Technical issues மூலம் கூடுதல் நேரம் கேட்டு இருந்தாலும், வருமான வரித்துறை நீட்டிப்பு செய்யவில்லை.
செப்டம்பர் 16-ஆம் தேதி, 7.53 கோடி ITR-கள் தாக்கல் செய்யப்பட்டன, அதில் 4 கோடி செயல்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு non-audit ITR தாக்கல் செய்யும் கடைசி தேதியை இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. Audit வழக்குகளுக்கான கடைசி தேதி அக்டோபர் 31.
ITR நிலை “Processed” ஆனால் பணம் வரவில்லை என்றால், சரிபார்க்க சில படிகள் உள்ளன: முதலில், e-Filing இணையதளத்தில் உள்நுழைந்து, “Refund/Demand Status-ல் நிலையைச் சரிபார்க்கவும். அங்கு “Refund processed” என்றாலும், உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். தகவல்கள் முழுமையாக சரியானால், “Refund Reissue” கோரிக்கை செய்யவும்.
ITR “Processed” ஆன பிறகு மூன்று மாதத்திற்குள் Refund credit ஆகிவிடும். அனால் இந்தாண்டு ITR form மற்றும் Portal-லில் பல update-களை செய்ததால் ITR filing ஜூன் மாதம் open ஆகி செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி முடிந்தது. ஆகவே Government ITR process-யை மெதவாக செல்படுத்திவருகிறது.