புதிய வருமான வரி மற்றும் பழைய வருமான வரி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து, பொருத்தமான முறையை தேர்வு செய்வதற்கான வழியை வருமான வரித்துறை அறிமுகம் செய்து உள்ளது. புதிய வருமான வரி முறையில், வரி விலக்கு வரம்பு நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டு, புதிய வரி விதிப்பு விகிதங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலையும் உள்ளது. எனினும் புதிய வரி விதிப்பு முறையில் exemptions போன்றவை கிடையாது. இதனால் சிலருக்கு பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்வது பலனுள்ளதாக இருக்கலாம்.
இந்நிலையில், பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் ஒருவர் செலுத்த வேண்டிய வரியை ஒப்பிட்டு பார்க்க கூடிய எளிய கால்குலேட்டர் வசதியை வருமான வரித்துறை இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவரது வருமானம் மற்றும் exemptions அடிப்படையில் பழைய மற்றும் புதிய வருமான வரி முறைகளில் செலுத்த வேண்டி யிருக்கும் வரி அளவின் ஒப்பீட்டை இதன் மூலம் அறியலாம்.