PF பணத்தை எடுக்கிறதுக்கு முன்னெல்லாம் 10-15 நாள் wait பண்ணவேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அவ்ளோ நாள் wait பண்ணேவேண்டிய அவசியேமேயில்லை. ATM-க்கு போயிட்டு 50% பணத்தை எடுக்கமுடியும். இதுக்காக government EPFO 3.0 அப்டினு ஒண்ண அறிவிச்சுயிருக்காங்க. இதுக்கு யாரெல்லாம் eligible, இத எப்படி withdraw பண்றதுனு பாக்கலாம்.
EPFO (Employee’s Provident Fund Organization) ஒருத்தர் organized sector-ல work பன்றாரு அப்டினா அவருக்கு PF பணம் பிடிப்பாங்க. எதுக்காக PF பணம் பிடிக்கிறாங்கனு பாத்தா employee retirement time-ல அவருக்கு உதவி இருக்குறதுக்கா பிடிக்கிறாங்க. பிடிக்கிற அந்த பணத்துக்கு வட்டியும் சேர்த்து கொடுப்பாங்க. ஆனால், நாம நமக்கு பணம் தேவைப்படும்போது, கடன் வாங்குறதுக்கு பதிலா, PF பணத்தை apply பண்ணுவோம் அதுவும் 10-15 நாளுக்குள்ள வரும்.
இனிமேல் 10-15 நாள் காத்திருக்கவேண்டிய அவசியமே கிடையாது. PF பணத்தை எடுக்க உடனே ATM-க்கு போய் PF card மூலமா பணத்தை எடுத்துக்கலாம். PF contribution பொறுத்தவரை இரண்டு இருக்கு, Employee contribution and Employer contribution. PF card மூலமா Employee contribution 12% அப்டினா அந்த 12% பணத்துக்கு எவ்வோளோ இருக்கோ அதுலயிருந்து 50% பணத்த Instant-அ withdraw பண்ணிக்கமுடியும்.
ஆனால் இதோட limit எவ்வளவு, எத்தனை நாள்களுக்குள்ள இத use பண்ணனும் அப்டிங்கிற regulation-அ இன்னும் government side-ல இருந்து தெளிவா சொல்லவில்லை. இந்த PF Card ஜனவரி 2025-ல இருந்து கொண்டுவர நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருகாங்க.