நாளை (April 1, 2026) முதல் New Income Tax Act நடைமுறைக்கு வந்தாலும், பழைய Income Tax Act 1961 உடனே முழுமையாக காணாமல் போகாது. அடுத்த சில வருடங்களுக்கு இந்த இரண்டு சட்டங்களும் சேர்ந்துதான் Travel பண்ணும். இது Taxpayers மத்தியில் நிறைய குழப்பங்களை உருவாக்கலாம். அதற்கான தெளிவான விளக்கங்களை இங்கே பார்க்கலாம்:
- FY 2025-26 Return Filing:
இந்த வருடம் July 2026-ல் நீங்கள் File பண்ணப்போகும் ITR (அதாவது FY 2025-26 அல்லது AY 2026-27) முழுமையாக பழைய 1961 Act படிதான் நடக்கும். புதிய சட்டத்தின்படி உள்ள ‘Tax Year’ Return Filing எல்லாமே அடுத்த வருடம் July 2027-ல் இருந்துதான் ஆரம்பிக்கும். அதனால் இந்த வருடம் ITR filing-ல் எந்த பெரிய மாற்றமும் இல்லை.
- Pending Cases and Appeals:
பழைய வருடங்களுக்கான Scrutiny Assessments, Reassessments, Disputes, மற்றும் Appeals எல்லாமே பழைய சட்டத்தின் படிதான் தொடர்ந்து தீர்க்கப்படும். புதிய சட்டத்தில் உள்ள Section 536 இதற்கு உத்தரவாதம் தருகிறது. உதாரணத்திற்கு, FY 2025-26 வருமானத்திற்காக 2028-ல் ஒரு Notice வந்தால் கூட, அது பழைய 1961 Act படிதான் விசாரிக்கப்படும்.
- Tax Payments and TDS Overlap:
இந்த Transition கட்டத்தில் Dual Compliance-ஐ ரொம்ப கவனமாக Handle பண்ணனும். உதாரணத்திற்கு, இந்த March 2026 Quarter-க்கான TDS Payment-ஐ ஏப்ரல் மாதம் கட்டும்போது அது பழைய சட்டத்தின் கீழ் (AY 2026-27) வரும். ஆனால் June 2026-ல் கட்டப்போகும் முதல் Advance Tax Installment புதிய சட்டத்தின் கீழ் (Tax Year 2026-27) வரும். இதுல ரொம்ப கவனம் தேவை.
- Old Tax Regime vs New Tax Regime Confusion:
நிறைய பேர் பழைய சட்டம் மாறுதுனு சொன்னதும், Section 80C, 80D போன்ற Deductions கிடைக்கிற Old Tax Regime முழுமையாக கேன்சல் ஆகிடும்னு நினைக்கிறாங்க. அது ஒரு பெரிய Misconception. Old Tax Regime ஒரு Optional Regime-ஆக புதிய சட்டத்திலும் தொடர்ந்து இருக்கும். உங்களுக்கு எது லாபகரமாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
முக்கியமான குறிப்பு:
Tax Challan Select பண்ணும்போது Assessment Year மற்றும் புதிய Tax Year இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சரியா புரிந்துகொண்டு Tax Pay பண்ணனும். ஒரு சின்ன Challan தப்பு நடந்தா கூட அது பெரிய Credit Mismatches-ல் கொண்டு போய் விட்டுடும்.
இந்த Transition Period-ல் எந்த தவறும் நடக்காமல் இருக்க, சரியான Tax Consultant-ஐ அணுகி உங்களுடைய Income Tax Return-ஐ File செய்வது ரொம்பவே பாதுகாப்பானது. இந்தத் தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் Share பண்ணுங்க, விழிப்புணர்வோடு இருப்போம்!
