உங்கள் Adhaar மற்றும் Pan Card-யை இணைக்கவேண்டுமெனில் Adhaar மற்றும் Pan Card-இல் உங்கள் பெயர் எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்.
தற்பொழுது எங்களிடம் Adhaar மற்றும் Pan Card-யை link செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதை வைத்து உங்களுக்கு சொல்கிறேன். Adhaar-இல் உங்கள் பெயர் எப்படி உள்ளதோ அதேபோல்தான் Pan Card-லும் கொடுக்கவேண்டும், அப்பொழுதான் இரண்டையும் link செய்யமுடியும்.
Adhaar மற்றும் Pan-இல் உங்கள் பெயரில் ஒரு எழுத்து மாறியிருந்தாலோ அல்லது ஒரு எழுத்து விடுபட்டுயிருந்தாலோ அல்லது ஒரு எழுத்து சேர்ந்திருந்தாலோ உங்களால் link செய்யமுடியாது. பெயர் மட்டுமில்லாமல் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடம் ஆகியவையெல்லாம் ஒரே மாதிரியாக இல்லாதபட்சத்தில் இரண்டையும் link செய்யமுடியாது.
மேலேகூறியுள்ளபடி, ஏதேனும் தவறுதலாக இருந்தால் உங்கள் பெயரை Adhaar-இல்
மாற்றவேண்டியிருக்கும்.இதனால் உங்களுக்கு ஏதேனும் வேலை இருந்தால் இந்த தவறை சரி செய்யும்வரை தள்ளிப்போகலாம்.
ஆகவே, Adhaar-இல் பெயர் எப்படி கொடுக்கவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம், Last Name மற்றும் First Name-இல் Initial மற்றும் Special Character கொடுக்கக்கூடாது. மாறாக Last Name மற்றும் First Name-இல் முழுமையான பெயரை மட்டுமே கொடுக்கவேண்டும்.
நீங்கள் ஏற்கனவே Last Name-இல் Initial மற்றும் First Name-இல் உங்கள் பெயரை வைத்து Adhaar எடுத்துள்ளீர்கள் என்றால், உங்களால் புதிதாக Pan Card பெறமுடியாது. ஏனெனில், தாற்பொழுது NSDL-இல் புதிதாக செய்துள்ள Update என்னவென்றால் Last Name மற்றும் First Name-இல் Initial மற்றும் Special Character கொடுக்கமுடியாது.
உதாரணமாக,முன்பே Adhaar-இல் பெயர் Last Name-இல் ” M ” என்றும், First Name-இல் ” Manikandan ” என்றும் இருந்து, Pan Card-இல் Last Name-இல் Marimuthu என்றும், First Name-இல் Manikandan என்றும் இருந்தால் இரண்டையும் link செய்யமுடியாது.
இதேபோல் Adhaar-இல் பெயர் Last Name-இல் ” M ” என்றும், First Name-இல் ” Manikandan ” என்று இருந்தால் உங்களால் புதிதாக Pan Card எடுக்கமுடியாது.
மாறாக, Adhaar-இல் பெயர் Last Name-இல் ” Marimuthu ” என்றும், First Name-இல் ” Manikandan ” என்று இருந்தால் மட்டுமே உங்களால் புதிதாக Pan Card பெறமுடியும் மற்றும் இரண்டையும் link செய்யமுடியும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.