2025-26 நிதியாண்டு முடிவடைய இருக்கிறது , அதனால் Income Tax மற்றும் GST related முக்கிய செயல்களை மார்ச் 31க்குள் முடிப்பது அவசியம் .
1. வருமான வரி : முக்கிய update!
2025-26 நிதியாண்டு முடிவதற்குள், உங்கள் வருமான வரி தொடர்பான முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியது அவசியம் . பழைய தவறுகளை சரி செய்ய ITR-U தாக்கல் செய்ய இது கடைசி வாய்ப்பு ஆகும். Q3 TDS Return தாக்கல் செய்யும் காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய நிதியாண்டில் குறைவான TDS பிடித்தம் செய்ய விரும்பினால் Form 13 இப்போதே apply செய்யலாம். Capital Gains இருந்தால் loss set-off பயன்படுத்தி tax save செய்ய இந்த நேரம் மிகவும் முக்கியமானது. Deadline miss பண்ணினால் அபராதமும் கூடுதல் வட்டியும் தவிர்க்க முடியாது.
2. G.S.T : முக்கிய update!
GST பதிவு செய்துள்ள வணிகர்கள், தங்கள் GSTR-1, 3B மற்றும் 2B கணக்குகளை சரியாக reconcile செய்து discrepancies இருந்தால் உடனே சரிசெய்ய வேண்டும்.ITC review செய்யாமல் விட்டால் futureல் input credit loss ஏற்படும், அதனால் இதை கவனமாக சரிபார்ப்பது அவசியம். Exporters க்கு LUT filing மார்ச் 31க்குள் செய்ய வேண்டும், இல்லையெனில் export செய்யும்போது IGST கட்ட வேண்டிய நிலை வரும். மேலும் ₹5 கோடி மேல் turnover உள்ள business கள் ஏப்ரல் 1 முதல் e-invoice முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். Deadline miss பண்ணினால் penalty மற்றும் compliance issues நிச்சயம் .
